அடையாள அட்டை அலுவலகம் பெயரில் புதிய வட்ஸ்அப் மோசடி…!
இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு, இந்த மோசடி ஆட்பதிவு திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி அரங்கேற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக, மிகவும் உத்தியோகபூர்வமான மற்றும் நம்பகமான முறையில் இந்த மோசடிச் செய்திகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் மிக எளிதாக ஏமாற்றமடைவதற்கான அதிக ஆபத்து உள்ளதாக அந்த பிரிவு எச்சரித்துள்ளது. இந்த மோசடி உண்மையில் எவ்வாறு நடக்கிறது என்று பார்ப்போம். மோசடிக்காரர்கள் வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி போலி அறிவிப்புகளை அனுப்புகின்றனர். இதில் ஆட்பதிவு திணைக்களத்தின் பெயர், தொடர்பு விபரங்கள் […]