எப்ஸ்டீன் விவகாரம்; நோர்வே முன்னாள் பிரதமர் மீது வழக்கு
அமெரிக்காவின் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே நாட்டின் முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் மீது “கடுமையான ஊழல்” குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய ஜாக்லாண்டிற்கு வழங்கப்பட்டிருந்த தூதரகப் பாதுகாப்பு (Immunity) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நோர்வேயின் பொருளாதாரக் குற்றப்பிரிவு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ உள்ள மின்னஞ்சல் தரவுகளின்படி, எப்ஸ்டீன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் ஜாக்லாண்ட் மற்றும் அவரது […]