அதிரடி திடீர் சோதனை… பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் பலர் சிக்கினர்!
மகரகம நாவின்ன பேருந்து நிலையத்தில் நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின் போது, 13 பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகளைப் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றுவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் தேசிய அளவில் ஒரு விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் போதைப்பொருள் தடுப்பு சோதனையின் கீழ், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் […]