ஜப்பானில் ரோபோ துறவி; கோவில்களிலும் தொழில்நுட்பம்
ஜப்பானில் தற்போது பௌத்த துறவிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு வினோதமான தீர்வை முன்வைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் ஒரு நவீன ‘ரோபோ’ துறவியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இது ஆன்மிக உலகில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த ரோபோ சாதாரணமானது அல்ல; பௌத்த மதத்தின் மிகவும் கடினமான மற்றும் ஆழமான புனித நூல்களைக் கூட இது கற்றுத் தேர்ந்துள்ளது. மனிதர்கள் மற்றவர்களிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளத் […]