சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தமே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
அதன் அடிப்படையில், இன்றைய நிலவரப்படி உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் சுமார் 4,737 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக முன் எப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த தங்கத்தின் விலை, தற்போது தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் சரிவு நகை வாங்குவோருக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
_________________________________________________________________________________________________
Gold prices in the global market are experiencing a sharp decline, bringing relief to consumers. According to the All Ceylon Jewellery Merchants’ Association, a trade agreement between India and the European Union is a key driver behind this trend, marking a significant drop from the record highs seen in recent months.