உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளமை நகைப் பிரியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,889 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்றைய தினம் (2) அது 4,687 டொலராகக் குறைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 12,000 ரூபாய் வரை குறைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி, இன்று 22 கரட் தங்கம் ஒரு பவுன் ரூ. 338,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை 380,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 368,000 ரூபாய் வரை சரிவடைந்துள்ளது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சி நகை வாங்குவோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
________________________________________________________________________________________
Gold prices have seen a significant drop globally, with an ounce falling by about 200 USD since last Friday. Reflecting this trend, the Sri Lankan market has also seen a sharp decline, with 22-carat gold dropping to 338,600 LKR per sovereign and 24-carat gold falling to 368,000 LKR, marking a decrease of approximately 12,000 LKR.