இன்றைய வானிலை நிலவரப்படி, நாட்டின் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகள் மற்றும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும். இந்த காற்றானது மணித்தியாலத்திற்கு சுமார் 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும். வாகன சாரதிகள் அதிகாலை வேளைகளில் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
_____________________________________________________________________________________________
Light showers are expected in the North Central and Eastern provinces, while thundershowers may occur in parts of Sabaragamuwa, Galle, and Matara after 2:00 PM. Strong winds up to 40 km/h are anticipated across several regions including the central hills and northern provinces, with misty conditions likely during the early morning in the Western, Sabaragamuwa, and Central areas.