இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (20) நாட்டின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கோரமான வீதி விபத்துக்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். லக்கல, பதுளை மற்றும் நவகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லக்கல பகுதியில் உள்ள பகமூன – ஹெட்டியப்பொல வீதியில், டிப்பர் வாகனம் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் 32 வயதுடைய தேவாலதெனிய பிரதேசவாசி படுகாயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதேபோல், பதுளை – தல்தென பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநரான 39 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மற்றொரு விபத்து நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோமாகம – கடுவலை வீதியில் இடம்பெற்றுள்ளது. வீதியைக் கடக்க முயன்ற 69 வயதுடைய பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், அந்த முதியவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Three individuals lost their lives in separate road accidents reported yesterday in Laggala, Badulla, and Navagamuwa. The victims include a 32-year-old pedestrian hit by a tipper truck in Laggala, a 39-year-old motorcyclist who lost control of his bike in Badulla, and a 69-year-old man who was struck by a motorcycle while crossing the road in Navagamuwa. Police are conducting further investigations into these incidents.