நாசாவின் மார்ஷல் விண்வெளி ஆய்வு மையம், பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்களது பெயரையும் நிலவுக்கு அனுப்ப விரும்புகிறீர்களா? இதற்காக நாசாவின் மார்ஷல் விண்வெளி ஆய்வு மையம் ‘Send Your Name’ என்ற ஒரு சுவாரஸ்யமான திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்படும் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய எஸ்டி கார்டில் (SD Card) பாதுகாப்பாகச் சேமிக்கப்படும்.
பின்னர், இந்த எஸ்டி கார்டு ஓரியன் (Orion) விண்கலத்தின் மூலம் நிலவை நோக்கிய தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கும் என நாசா அறிவித்துள்ளது. விண்வெளி ஆய்வில் ஆர்வம் கொண்ட பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம் என நாசா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் அழைப்பு விடுத்துள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள், உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் செல்லப் பிராணிகளின் பெயர்களில் கூட பிரத்தியேக “போர்டிங் பாஸ்களை” (Boarding Passes) நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பினால், நாசாவின் உத்தியோகபூர்வ இணையதளமான https://go.nasa.gov/49NQ4mf என்ற முகவரியின் ஊடாக உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
NASA’s Marshall Space Flight Center has launched the #SendYourName initiative, allowing the public to send their names to the Moon. Registered names will be stored on a special SD card and placed aboard the Orion spacecraft for its historic lunar mission. Participants, including children and pet owners, can receive personalized digital boarding passes by signing up through NASA’s official website.