Skip to main content

Super Tamils

உலகின் சிறந்த தேனிலவு இடங்கள்: முதல் 3-ல் இலங்கை!

இலங்கை 2026 ஆம் ஆண்டில் உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த 25 இடங்களில் 3 இடங்களைப் பெற்றுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தேனிலவுக்கான உலகின் சிறந்த 25 இடங்களின் பட்டியலில், இலங்கை இம்முறை மூன்று முக்கிய இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகப்புகழ் பெற்ற சுற்றுலா ஆலோசனை நிறுவனமான ‘ட்ரிப் அட்வைசர்’ (TripAdvisor) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தரவரிசையின்படி, தேனிலவு கொண்டாடச் சிறந்த இடங்களுக்கான உலகப் பட்டியலில் காலி நகரம் 5-வது இடத்தைப் பெற்று முன்னணி வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து, இயற்கை எழில் கொஞ்சும் எல்ல (Ella) நகரம் 13-வது இடத்தையும், கடற்கரை அழகிற்குப் பெயர் போன தங்காலை நகரம் 22-வது இடத்தையும் பிடித்துள்ளன.
Sri Lanka: The Ultimate Travel Guide - Thrifty Nomads

அதேவேளை, இந்தப் பட்டியலில் முதலிடத்தை இந்தோனேசியாவின் பாலி தீவு அலங்கரிக்கிறது. இரண்டாவது இடத்தை மொரிஷியஸும், மூன்றாவது இடத்தை மாலைதீவும் தட்டிச் சென்றுள்ளன. கடந்த ஆண்டு உலகம் முழுவதிலுமிருந்து பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளின் கருத்துக்கள் மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களின் அடிப்படையிலேயே இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

__________________________________________________________________________________________________________________________________________

Sri Lanka has secured three spots in TripAdvisor’s 2026 list of the world’s top 25 honeymoon destinations. Galle ranks 5th, followed by Ella at 13th and Tangalle at 22nd. Indonesia’s Bali topped the list, with Mauritius and Maldives following in second and third place. The rankings were based on global traveler reviews and experiences shared over the past year.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *