Skip to main content

Super Tamils

ரஷ்யா, ஈரான் மீது டிரம்பின் புதிய பொருளாதார அழுத்தம்…! கூடுதல் வரி விதிக்க கோரிக்கை.

அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) குறித்த சட்டமூலத்தில், ரஷ்யா மீது விதிக்கப்படவுள்ள புதிய பொருளாதாரத் தடைகள் ஈரானுக்கு எதிரான இறக்குமதி வரிகளையும் இணைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

ரஷ்யாவுக்கு எதிராக வரவிருக்கும் புதிய பொருளாதாரத் தடைகள் சட்டமூலத்தில் ஈரானுக்கான இறக்குமதி வரிகளையும் அமெரிக்க காங்கிரஸ் இணைக்க வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஈரான் மீது வரிகள் விதிக்கப்படுவதை தான் மிகவும் விரும்புவதாகவும், அது இந்தச் சட்டமூலத்தை இன்னும் பலமானதாக மாற்றும் என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளையில், ஈரான் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எகிப்து நாட்டின் டமியேட்டா துறைமுகத்தில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்துத் தனக்கு முறையான தகவல்கள் வந்து சேர்ந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், அவர்களை மிகக் கடுமையான முறையில் தாக்கும் தருணம் இதுவென்றும், தாக்குதல் வரவிருப்பதை அவர்களுமே நன்றாக அறிவார்கள் என்றும் கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் ஈரானுடன் ஏதேனும் ஒப்பந்தம் ஒன்று எட்டப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

U.S. President Donald Trump stated that Congress should include import tariffs against Iran in the upcoming sanctions bill targeting Russia, while also warning of severe impending strikes against Iran following an explosion at Egypt’s Damietta port.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்