இன்று (16) இரவு முதல் அமுலாகும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதால், அதன் பலனை மக்களுக்கும் வழங்கும் வகையில் பால் தேநீர் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷ ருக்ஷான் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நாட்டில் உள்ள அனைத்து உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் இந்த விலை குறைப்பு சலுகையை வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மா பொதியின் விலை 125 ரூபாயினாலும், 400 கிராம் பொதியின் விலை 50 ரூபாயினாலும் இன்று முதல் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த விலை மாற்றத்திற்கு இறக்குமதியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதை அடுத்தே தேநீர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
The All Island Canteen and Restaurant Owners’ Association has announced a 10 rupee reduction in the price of a cup of milk tea, effective from tonight. This decision follows the reduction in imported milk powder prices—125 rupees for a 1kg pack and 50 rupees for a 400g pack—as agreed upon by importers and the Ministry of Trade. The association’s chairman has urged all restaurant owners to pass this benefit on to consumers immediately.