சரக்கு வானூர்தியுடனான தொடர்பு அரபிக்கடல் பகுதியில் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜாவிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்த K2 Airways நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரை நோக்கிப் புறப்பட்ட K2 ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 சரக்கு விமானம் ஒன்று, அரபிக்கடல் பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளது. இந்த விமானத்தில் மொத்தம் 5 ஊழியர்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை எப்படி இழந்தது, அதற்கு என்ன காரணம் என்பது பற்றிய அதிகாரபூர்வமான எந்தவொரு தகவலையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. தற்போதைய நிலையில், மாயமான அந்த சரக்கு விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டு நடந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
A Boeing 737 cargo aircraft operated by K2 Airways has lost contact over the Arabian Sea while en route from Sharjah to Karachi. There were five crew members on board, and while the official cause of the communication loss remains unknown, search and rescue operations are currently underway.