Skip to main content

Super Tamils

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலிவுட்டில் ரீ-என்ட்ரி…! ‘சிக்மா’ மூலம் களமிறங்கும் ஷிவ் பண்டிட்.

‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கடந்த 2012ஆம் ஆண்டு ரிலீஸான “லீலை” படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் ஷிவ் பண்டிட். இப்போது, ரொம்பக் காலத்திற்குப் பிறகு அவர் மீண்டும் தமிழ் திரையுலகில் தனது அடுத்த இன்னிங்ஸைத் தொடங்குகிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டபோது:

“தமிழ் சினிமா உலகம் எப்போதுமே என் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமானது. லீலை படத்தில் நடித்தபோது தமிழ் சினிமா ரசிகர்கள் என் மீது பொழிந்த அன்பை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது.

இப்போது உருவாகியிருக்கும் ‘சிக்மா’ படம் மூலமாக கோலிவுட்டில் என்னுடைய திரைப்பயணத்தின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். மிகத் தெளிவான சிந்தனையும் திறமையும் கொண்ட ஜேசன் சஞ்சய் போன்ற ஒரு இளம் இயக்குநரின் இயக்கத்தில் வேலை செய்தது எனக்குக் கிடைத்த ஒரு அருமையான அனுபவம்,” என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

சுந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்தில், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், யோக் ஜப்பி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமனின் அதிரடி இசையிலும், கிருஷ்ணன் வசந்தின் நேர்த்தியான ஒளிப்பதிவிலும் தயாராகியுள்ள “சிக்மா” திரைப்படம், வரும் 31ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

After a long hiatus, actor Shiv Pandit, who debuted in Tamil cinema with the 2012 film “Leelai,” is making his comeback in Kollywood with the upcoming movie “Sigma.” Expressing his excitement about working with promising young director Jason Sanjay, the actor shared his love for the Tamil audience, while the star-studded film, featuring Sundeep Kishan in the lead and music by Thaman, is scheduled for a worldwide theatrical release on the 31st of this month.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்