Skip to main content

Super Tamils

சீனா–ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சி…! உலக நாடுகளின் கவனம் குவிப்பு.

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து, சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான கிங்டாவ் நகரின் கடல் மற்றும் வான்பரப்பில் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

சீனாவும் ரஷ்யாவும் இணைந்து தங்களது கடற்படைகளின் பலத்தைக் காட்டும் வகையில், “கூட்டுக்கடல்-2026” என்ற பிரம்மாண்ட இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. வரும் ஜூலை 6 முதல் ஜூலை 13 வரை சீனாவின் கிங்டாவ் நகரின் கடல் மற்றும் வான்பரப்பில் இந்த அதிரடிப் பயிற்சி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் பசுபிக் பெருங்கடல் பகுதியில் இணைந்து கூட்டு ரோந்துப் பணிகளிலும் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதையும், இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பை பலப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்யாவின் பசிபிக் கடற்படையைச் சேர்ந்த அதிநவீன ஏவுகணை போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் மீட்புக் கப்பல்கள் களமிறங்கியுள்ளன. அதேபோல், சீனாவின் வடக்கு தியேட்டர் கமாண்ட் பிரிவைச் சேர்ந்த அழிப்புவகை போர்க்கப்பல்களும், விநியோகக் கப்பல்களும் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.

இந்தத் தொடர் பயிற்சியின் போது, வான்வழியாக வரும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடித்தல், உளவு பார்த்தல் மற்றும் கடல்வழியாக எதிரிகளைத் தாக்குதல் போன்ற பல்வேறு அதிநவீன உத்திகள் இரு நாட்டுப் படைகளாலும் சோதித்துப் பார்க்கப்படவுள்ளன.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இதுபோன்ற கூட்டுப் பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. குறிப்பாக, அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இந்த கூட்டு இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரை சீனா இதுவரை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்திற்குப் போட்டியாக, தங்களின் அசைக்க முடியாத பொருளாதார மற்றும் இராணுவ நட்புறவை உலகிற்கு பறைசாற்றவே இரு நாடுகளும் இந்த கூட்டுப் பயிற்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

The defense ministry of China has announced a joint naval and air military exercise with Russia, named “Joint Sea-2026,” scheduled from July 6 to July 13 off the coast of Qingdao, followed by joint patrols in the Pacific Ocean. Featuring advanced warships, submarines, and aircraft from both nations, this drill aims to enhance regional security and counter challenges, serving as a strong display of their growing economic and military alliance amidst ongoing geopolitical tensions with the United States and the West.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்