Skip to main content

Super Tamils

15 பவுணுக்கும் மேற்பட்ட நகை திருட்டு…! 70 வயது வீட்டுப் பணியாளரும் நகைக்கடை உரிமையாளரும் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ, கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றில், பாரிய திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

சுமார் 83 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 15 பவுனுக்கும் அதிகமான தங்க நகைகளையும், 11 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வெளிநாட்டுப் பணத்தையும் சிறுகச் சிறுகத் திருடி வந்த வீட்டுப் பணிப் பெண்ணை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இந்தப் பெண், கிரிஉல்ல பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் ஏற்கனவே துபாயில் 15 வருடங்களும், குவைத்தில் 3 வருடங்களும் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை செய்த நீண்ட அனுபவம் கொண்டவர். அத்துடன், திருட்டு நடந்த இந்த பொரலஸ்கமுவ வீட்டில் கடந்த 6 வருடங்களாகவே தொடர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார்.

இவ்வீட்டின் உரிமையாளர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருவதை ஒரு சாதகமான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட இப்பெண், அவர்கள் இல்லாத இடைவெளிகளில் நகைகளையும் வெளிநாட்டுப் பணத்தையும் மிகவும் சாதுரியமாகத் திருடி வந்துள்ளார்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர்களால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கடந்த 30ஆம் திகதி சந்தேகநபரான இந்தப் பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவல்களின்படி, திருடப்பட்ட தங்க நகைகளை விலைக்கு வாங்கிய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க நகைகள் சந்தேகநபரான அந்தப் பெண்ணின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளின் ஒரு பகுதியையும், 4 லட்சத்து 30,000 ரூபாய் வெளிநாட்டுப் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும், திருடப்பட்ட நகைகளின் ஒரு பகுதியை அந்த நீர்கொழும்பு நகைக்கடை உரிமையாளர் உருக்கி, குருணாகல் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு விற்றுவிட்டதும் தெரியவந்துள்ளது.

இப்பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

A 70-year-old domestic helper with extensive experience working in the Middle East has been arrested for systematically stealing over 15 sovereigns of gold jewelry and foreign currency, collectively worth over 9.4 million LKR, from a house in Boralesgamuwa where she worked for six years. Taking advantage of the homeowners’ frequent overseas trips, she carried out the thefts over time. Following a complaint, the police arrested her along with a 34-year-old goldsmith from Negombo who purchased the stolen jewelry, and a portion of the stolen cash and melted gold has been recovered.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்