தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான யூன் சுக் இயோலின் மனைவி கிம் கீன் ஹீ. அந்நாட்டின் முதல் பெண்மணியாக இருந்த இவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களை விசாரித்த சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
அரசு வேலைகளைப் பெற்றுத் தருவதற்கும், அரசியல் ரீதியான ஆதாயங்களை அடைவதற்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை கிம் கீன் ஹீ பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்காக கட்டுமான நிறுவனம் ஒன்றின் அதிபரிடம் இருந்து 100 மில்லியன் வோன் ($64,750) மதிப்புள்ள தங்க ஆமை, கிறிஸ்டியன் டியோர் (Dior) பிராண்ட் கைப்பை மற்றும் சொகுசு நகைகளை அவர் லஞ்சமாகப் பெற்றுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன.
லஞ்சமாகப் பெற்ற பொருட்கள் இந்தத் தீர்ப்பின் ஒரு பகுதியாக, அவருக்கு 64.8 மில்லியன் வோன் ($42,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அவர் லஞ்சமாக வாங்கிய அத்தனை ஆடம்பரப் பொருட்களையும் பறிமுதல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 ஆண்டுகள் சிறை தென் கொரிய முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கடந்த ஏப்ரல் மாதமே கிம் கீன் ஹீக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது அடுத்த ஊழல் வழக்கிலும் அவருக்கு இந்த புதிய தண்டனை கிடைத்துள்ளது.
இதற்கிடையில், வடகொரிய எல்லைக்குள் ராணுவ ட்ரோன்களை அனுப்பிய விவகாரம் மற்றும் நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய குற்றங்களுக்காக, இவருடைய கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான யூன் சுக் இயோல் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
The Seoul Central District Court has sentenced Kim Keon-hee, the former First Lady of South Korea and wife of ex-President Yoon Suk-yeol, to seven years in prison for bribery and corruption. She was found guilty of accepting luxury items, including a Dior handbag and expensive jewelry, worth 100 million won ($64,750) from a construction mogul in exchange for political favors and government jobs. Along with a heavy fine and the confiscation of the illicit gifts, this sentence follows a prior four-year prison term she received in April for stock manipulation, while her husband is already serving a life sentence on separate charges.