Skip to main content

Super Tamils

உலகக் கோப்பையில் மாபெரும் அதிர்ச்சி…! உருகுவேவை தடுத்து நிறுத்திய அறிமுக அணி கேப் வெர்டே.

2 முறை உலகக்கோப்பை வென்ற நாட்டை எதிர்த்து விளையாடி, இதுவரை உலககோப்பைகளில் பெயரே அளிக்காத நாடு போட்டியை ட்ரா செய்து அதிர்ச்சியளித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் முதன்முறையாக களம் கண்டுள்ள கேப் வெர்டே அணி, தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த உருகுவே அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் (டிரா) முடிந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியாமி மைதானத்தில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில், கேப் வெர்டே அணி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணியின் கேவின் பினா ஒரு பிரீ கிக் வாய்ப்பை கோலாக மாற்றினார். உலகக் கோப்பை வரலாற்றில் அந்த அணி பதிவு செய்த முதல் கோல் இதுவாகும். ஆனால், முதல் பாதி ஆட்டம் முடிவதற்குள் சுதாரித்துக் கொண்ட உருகுவே அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. உருகுவே அணியின் மேக்ஸி ஆரௌஜோ மற்றும் அகஸ்டின் கனோப்பியோ ஆகியோர் இந்த கோல்களை அடித்தனர்.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில், 40 வயதான உருகுவே அணியின் கோல்கீப்பர் பெர்னாண்டோ முஸ்லேரா செய்த ஒரு சிறிய தவறைச் சாதகமாக்கிக் கொண்ட கேப் வெர்டே வீரர் ஹெலியோ வரேலா, பந்தை லாவகமாக கோல் வலைக்குள் தள்ளினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இந்த டிராவின் மூலம் கேப் வெர்டே அணிக்கு ‘ஹெச்’ பிரிவில் இரண்டாவது புள்ளி கிடைத்துள்ளது. தனது அடுத்த போட்டியில் சவுதி அரேபியாவை வீழ்த்தினால், அந்த அணி அடுத்த சுற்றான 32 அணிகள் கொண்ட பகுதிக்கு முன்னேறும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

மறுபுறம், ஏற்கனவே இரண்டு முறை உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த உருகுவே அணி, சவுதி அரேபியா மற்றும் கேப் வெர்டே ஆகிய இரு அணிகளுடனான போட்டிகளையும் டிரா செய்ததால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு உருகுவே தள்ளப்பட்டுள்ளது.

உருகுவே அணியின் பயிற்சியாளர் மார்செலோ பியெல்சா அணியில் சில புதிய மாற்றங்களைச் செய்து பார்த்த போதிலும், அவரால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனது.

அதேநேரம், கேப் வெர்டே அணியின் பயிற்சியாளர் புபிஸ்டா, தனது அணியின் தாக்குதல் ஆட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மூன்று முக்கிய மாற்றங்களைச் செய்து அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.

World Cup debutants Cape Verde pulled off a major upset by holding two-time world champions Uruguay to a thrilling 2-2 draw at the Miami Stadium. Despite trailing in the first half and playing against a formidable opponent, Cape Verde capitalised on a goalkeeper error to equalise, keeping their hopes alive for a spot in the round of 32, while putting Uruguay’s tournament survival in serious jeopardy ahead of their crucial match against Spain.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்