83.77 அமெரிக்க டொலராக எண்ணெய் விலை சரிவு
இதன் காரணமாக, பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 3.55 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 83.77 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோல், டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய்யின் விலையும் 4.10 சதவீதம் சரிவைச் சந்தித்து 80.78 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
மேலும், மேர்பன் ரக மசகு எண்ணெய்யின் விலை 4.23 சதவீதம் வரை குறைந்து, தற்போது 83.02 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகி வருகிறது.
ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த மோதல் போக்கு காரணமாக, கடந்த மே மாதத்தில் மசகு எண்ணெய்யின் விலை மிக உயர்ந்த அளவைத் தொட்டிருந்தது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியான தொடர் தகவல்களால், மசகு எண்ணெய் விலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
இந்த நிலையில், ஈரானும் அமெரிக்காவும் தங்களுடைய அமைதி உடன்படிக்கை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, மசகு எண்ணெய்யின் விலை சந்தையில் திடீரென பெருமளவு சரிந்துள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை இரு நாடுகளுக்கும் இடையே இந்தச் சமாதான ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானால், உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்னும் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Following an official peace agreement announcement between the United States and Iran, global crude oil prices have experienced a sharp decline. Prices for Brent, WTI, and Murban crude types fell significantly after having previously reached peak levels during the US-Iran conflict in May. Market experts indicate that if the formal peace treaty is signed this coming Friday, crude oil prices are highly likely to drop even further.