நேற்று நடந்த எலிமினேட்டர் (வெளியேறுதல் சுற்று) போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
நியூ சண்டிகார்,
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இப்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் நடந்த முதலாவது குவாலிபையர் போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற வாழ்வா-சாவா எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்த ஆட்டத்தில் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் மைதானத்தை அதிர வைத்தது. அவரது ருத்ரதாண்டவத்தால் ராஜஸ்தான் அணி 243 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல், 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி மாஸ் வெற்றி பெற்று, இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதன் மூலம், நாளை நடக்கவிருக்கும் 2-வது தகுதிச்சுற்று போட்டியில், முதல் தகுதிச்சுற்றில் தோற்றுப்போன குஜராத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடவுள்ளது. இந்த ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி நேராக இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும். நியூ சண்டிகார் மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த பலப்பரீட்சையில், இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால், இந்த மேட்ச்சில் சுவாரஸ்யத்திற்கும் விறுவிறுப்பிற்கும் கண்டிப்பாக பஞ்சமிருக்காது!
Rajasthan Royals defeated Sunrisers Hyderabad by 47 runs in the IPL Eliminator match, powered by a spectacular batting performance from Suryavanshi, which helped them set a massive total of 243. With this victory, Rajasthan has advanced to Qualifier 2, where they will face Gujarat Titans—who lost in Qualifier 1—in a high-stakes knockout match at New Chandigarh to determine who will join Bengaluru in the finals.