அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெறும் போர் நீண்ட காலம் நீடிக்கும் என்ற கவலையே, டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் சரிந்து போயுள்ளமைக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த விடயம் ரொய்ட்டர்ஸ் ஃஇப்சாஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நான்கு நாட்களால் நடைபெற்று நேற்று முடிவடைந்த இந்த கருத்துக்கணிப்பின்படி, ட்ரம்பின் செயல்பாட்டிற்கு 33 வீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்; 64 வீதமானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 80 வீத அமெரிக்கர்கள் (87 வீத ஜனநாயகக் கட்சியினர் மற்றும் 71 வீத குடியரசுக் கட்சியினர்) ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் நீண்ட காலத்திற்குத் தொடரும் என நம்புகின்றனர். சில வாரங்களில் முடிவடையும் என 16 வீதமானோர் மட்டுமே நினைக்கின்றனர்.
ஈரான் மீதான தாக்குதல்களால் அமெரிக்கா உட்பட்ட உலகளாவிய எண்ணெய் விலையில் உயர்வும் ட்ரம்பின் சரிவுக்கான காரணமாகும்.
இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் 3 நடைபெறும் இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் தங்கள் பெரும்பான்மையைத் தக்கவைப்பது குறித்து குடியரசுக் கட்சியினருக்கு அச்சம் உருவாகியுள்ளது.
President Donald Trump’s approval rating has dropped to a low of 33 percent, primarily driven by public anxieties over a prolonged conflict with Iran and surging global oil prices, which has raised concerns for his party ahead of the upcoming midterm elections.