Skip to main content

Super Tamils

பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் ஆகிப் நபி…! இலங்கை தொடரில் புதிய வாய்ப்பு.

பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இணையும் ஆகிப் நபி: இலங்கைக்கு எதிரான தொடர்!

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஜஸ்ப்ரீத் பும்ராவிற்குப் பதிலாக, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்படி, இந்திய மூத்த டெஸ்ட் அணியில் இடம்பெறும் வாய்ப்பைப் பெறும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3ஆவது கிரிக்கெட் வீரர் ஆகிப் நபி ஆவார். இதற்கு முன்னர் பர்வேஸ் ரசூல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் வெள்ளைப் பந்து போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பும்ராவின் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பின்னர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் கல்லூரியில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், முழங்காலில் தொடர்ந்து அசௌகரியம் உணரப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரைத் தொடரிலிருந்து விலக்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மருத்துவக் குழு தீர்மானித்துள்ளது.

ஆகிப் நபி, ரஞ்சி கிண்ண உள்ளூர் டெஸ்ட் தொடரின் கடந்த இரண்டு பருவங்களில் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜம்மு-காஷ்மீர் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் கீழ்வரிசையில் பயனுள்ள ஓட்டங்களைச் சேர்க்கும் துடுப்பாட்டத் திறனையும் அவர் கொண்டுள்ளார்.

இந்தநிலையில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கும் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jammu and Kashmir fast bowler Aqib Nabi has been named as a replacement for the injured Jasprit Bumrah in India’s Test squad for the upcoming series against Sri Lanka, becoming the third player from the region to earn a spot in the senior Test team.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்