நடிகர் விஜய் நடிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கடைசியாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பிரம்மாண்டமாக உலகமெங்கும் வருகிற 23-ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் வெளிவரும்போதும் அந்த படத்தின் முன்பதிவில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில், தற்போது ஜனநாயகன் திரைப்படத்திற்கான முன்பதிவு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதுவரை நடந்த முன்பதிவில் இப்படம் ரூ. 21 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் முதல் நாளே உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The highly anticipated film Jananayagan, starring actor and Tamil Nadu Chief Minister Vijay and directed by H. Vinoth, is set for a grand worldwide release on July 23. With advance bookings already crossing 21 crore rupees, the movie is expected to smash box office records by grossing over 100 crore rupees globally on its opening day