2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி தொடங்கி 26ஆம் திகதி வரை 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நாடு முழுவதும் நடாத்தப்பட்டன.
இந்தப் பரீட்சைக்காக நாடெங்கிலும் இருந்து மொத்தம் 451,463 மாணவர்கள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப் பரீட்சை முடிவுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளன. பரீட்சார்த்திகள் தங்களுடைய பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.doenets.lk என்ற முகவரியில் சென்று பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The results of the 2025 G.C.E. Ordinary Level Examination, which was held from February 17 to 26, 2026, have been released today. A total of 451,463 candidates sat for the exam, and they can now access their results online via the official website of the Department of Examinations at www.doenets.lk.