நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார், எஸ்டிஆர் (STR) பத்தி ஒரு பிரேக்கிங் அப்டேட்
நம்ம சிம்புவுக்கு இப்போ 42 வயசாகுது, வர்ற பிப்ரவரி 3 வந்தா 43 வயசு கம்ப்ளீட் ஆகப்போகுது. தமிழ் சினிமாவுல இருக்குற மத்த எல்லா ஹீரோக்களுக்கும் கல்யாணம் ஆகி, பசங்க ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா நம்ம தலைவன் மட்டும் இன்னும் ‘முரட்டு சிங்கிள்’ கோட்டையில தான் கொடி கட்டிப் பறக்குறாரு.
ஆனா இப்போ கோடம்பாக்கத்துல ஒரு புது குண்டு வீசியிருக்காங்க! என்னன்னா, நம்ம சிம்புவுக்கும், 33 வயசு நடிகை நிதி அகர்வாலுக்கும் (Nidhhi Agerwal) சீக்கிரமே கல்யாணம் நடக்கப்போகுதாம்! இவங்க ரெண்டு பேரும் ‘ஈஸ்வரன்’ படத்துல நடிச்சப்பவே ஏதோ ஒன்னு ‘ஸ்பார்க்’ ஆச்சுன்னு அப்பவே கிளம்புச்சு ஒரு பேச்சு. இப்போ அது அப்படியே சூடு பிடிச்சு, ‘வீட்ல ஓகே சொல்லிட்டாங்க, சீக்கிரமே மேளம் சத்தம் கேட்கும்’னு வரைக்கும் போயிருச்சு.
சிம்பு தரப்புல கேட்டா, ‘ஏங்க, இது வழக்கமா ரெண்டு வருஷத்துக்கு ஒருவாட்டி வர்ற நியூஸ் தானப்பா, நிஜமா இருந்தா நாங்களே லெட்டர் கொடுத்து சொல்றோம்’னு கூலா சொல்றாங்க. ஆனா ரசிகர்கள் மட்டும் விடுறதா இல்ல, ‘தலைவா, சீக்கிரம் கல்யாணத்த பண்ணுங்கப்பா, நாங்க எப்போ தான் பிரியாணி சாப்பிடுறது?’ன்னு வெயிட்டிங்ல இருக்காங்க.
ஒரு பக்கம் வெற்றிமாறன் சார் கூட ‘அரசன்’ படத்துல பிஸியா இருக்குற சிம்பு, ‘கல்யாணம் எப்போ நடக்கணும்னு இருக்கோ அப்போ நடக்கும், இப்போதைக்கு எனக்கு மன அமைதி தான் முக்கியம்’னு தத்துவமெல்லாம் பேசுறாரு.