களுத்துறை பக்கம் ஒரு தம்பதியினர், “குடும்பத்தோட சேர்ந்து ஏதாவது பிசினஸ் பண்ணுவோம்”னு முடிவு பண்ணி, கொஞ்சம் விபரீதமான பிசினஸ்ல இறங்கி மாட்டிக்கிட்டாங்க.
என்ன பிசினஸ் தெரியுமா? “வீட்லையே நோட்டு அடிப்பது எப்படி?”
கதை சுருக்கம்:
-
ஷாப்பிங் ஸ்பெஷலிஸ்ட்ஸ்: இந்த கணவனும் (50 வயசு) மனைவியும் (49 வயசு) சும்மா இல்ல, ஹொரண, மத்துகம, பாணந்துறைனு ஊர் ஊரா போய் ஷாப்பிங் பண்ணிருக்காங்க. ஆனா கையில கொடுத்தது எல்லாம் இவங்களே தயாரிச்ச “சுடச் சுட” 5000 ரூபா கள்ள நோட்டு!
-
கையும் களவுமாக: போலீஸ்க்கு தகவல் போயிருக்கு. “யார்ரா அது ஊருக்குள்ள புது நோட்டா புழங்க விடுறது?”னு தேடுனா, இந்த ஜோடி சிக்கிடுச்சு.
-
கைவசமிருந்த சொத்து: புடிச்சு பார்த்தா, மொத்தமா 5 போலி நோட்டுகள் இருந்துருக்கு. (கணக்கு வழக்குல கரெக்டா இருந்திருக்காங்க போல, ஒரு சாம்பிள் பீஸ் கூட மிஸ் ஆகல!).
-
பழைய ஹிஸ்டரி: விசாரிச்சதுல தான் தெரியுது, இவங்க ஏற்கனவே அகலவத்தை, களுத்துறை ஸ்டேஷன்கள்ல இதே மாதிரி நோட்டு அடிச்ச கேஸ்ல ஃபேமஸ் ஆனவங்கனு!
மொத்தத்துல:
“நாம இருவர் நமக்கு இருவர்”ங்கிற காலமெல்லாம் போய், “நாம இருவர் நமக்கு 5000 ரூபா நோட்டு”னு வாழ்ந்து பார்த்திருக்காங்க. ஆனா இப்போ கம்பி எண்ணிட்டு இருக்காங்க!
இனிமே ஜெயில்ல தான் “குடும்பப் பாட்டு” பாடணும்! 👮♂️💸⛓️