Skip to main content

Super Tamils

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை சேவை…! சிறப்பு அடையாள அட்டை அறிமுகம்

சிறப்பு அடையாள அட்டைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு,

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குரிய சேவைகளை எவ்வித தாமதமும் இன்றி முன்னுரிமையடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக, சிறப்பு அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான முக்கிய முடிவை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபை அதிகாரப்பூர்வமாக எடுத்துள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது.

இவற்றுடன் கூடுதலாக, மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக அழைப்பதற்கும் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்த வேண்டிய சரியான கலைச்சொற்கள் அடங்கிய வழிகாட்டியை, உத்தியோகபூர்வ மொழிகள் திணைக்களத்துடன் இணைந்து தயாரித்து வெளியிடவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The National Council for Persons with Disabilities, chaired by Minister Upali Pannila, has decided to introduce special identity cards for persons with disabilities to ensure they receive priority services at government institutions. Additionally, in collaboration with the Department of Official Languages, they plan to release an official guide establishing appropriate vocabulary to be used when addressing individuals with disabilities.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்