புதிய ஆய்வில் தகவல்: காற்றில் தங்கத்தைக் கக்கும் அண்டார்டிகாவின் மவுண்ட் எரேபஸ் எரிமலை!
அண்டார்டிகாவில் இருக்கும் மவுண்ட் எரேபஸ் எரிமலையானது, ஒவ்வொரு நாளும் காற்றில் கிட்டத்தட்ட 10 சவரன் தங்கத்தை வாரி இறைத்து வருவதாக அண்மைக்கால ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்த எரிமலை காற்றில் கலக்கவிடும் தங்கத்தின் ஒட்டுமொத்த மதிப்பு, ஒரு வருடத்திற்குத் தோராயமாக 18.9 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, காற்றில் பரவும் இந்தத் தங்கத் துகள்கள் எரிமலை இருக்கும் இடத்திலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்டு, அண்டார்டிகாவின் உறைந்த பனிப்பாறைகளின் மேல் படிந்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
A recent study reveals that Mount Erebus, an active volcano in Antarctica, releases approximately 10 sovereigns of gold into the air daily, amounting to an annual value of about 18.9 crore rupees. These airborne gold particles travel up to 1,000 kilometers from the volcano, eventually settling across the Antarctic ice sheets.